Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அசிங்கமான கால் பாத வெடிப்பை மறைய வைக்கும் சூப்பர் க்ரீம்!! இதற்கு வெறும் 2 பொருள் இருந்தால் போதும்!!

நம் பாதங்கள் மென்மையாவும்,வெடிப்பு இல்லாமலும் இருந்தால் தான் அழகாக இருக்கும்.ஆனால் எல்லோருடைய பாதங்களும் இப்படி இருப்பதில்லை.தண்ணீரில் அதிக நேரம் பாதங்கள் இருத்தல்,பனி காலம்,ஒவ்வாமை போன்ற காரணங்கள் பாத வெடிப்பு ஏற்படுகிறது.இந்த பாத வெடிப்புகள் குணமாக வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று
2)மெழுகுவர்த்தி – ஒன்று
3)தேங்காய் எண்ணெய் / கடுகு எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு மெழுகுவர்த்தி எடுத்து காய்கறி சீவல் அல்லது பீலர் கொண்டு சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு இந்த மெழுகுவர்த்தி சீவலை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் நன்றாக சூடாகி வந்ததும் மெழுகுவர்த்தி கலவை உள்ள கிண்ணத்தில் அதில் வைத்து டபுள் பாய்லிங் மெத்தட்படி கொதிக்க வைக்க வேண்டும்.மெழுகுவர்த்தி உருகி வரும் வரை கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

ஸ்டெப் 04:

பின்னர் இதில் ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை பொட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து கால் பாத வெடிப்பு மீது அப்ளை செய்து வந்தால் ஒரு வாரத்தில் வெடிப்புகள் மறைவதை கண்கூட பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)மருதாணி இலை – ஒரு கப்
2)மஞ்சள் கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு கப் மருதாணி இலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

இந்த மருதாணி பேஸ்டை கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இந்த மருதாணி பேஸ்ட்டை கால் பாத வெடிப்பில் அப்ளை செய்து வந்தால் அவை கூடிய விரைவில் குணமாகிவிடும்.

Exit mobile version