பலவீனமான நரம்புகளை வலிமையாக்கும் சூப்பர் பானம்!! அடிக்கடி செய்து சாப்பிடுங்க!!

0
81
Bone Strength Tips in Tamil

ஊட்டச்சத்து குறைவான உணவுகளால் நரம்புகள் பலவீனமாகிறது.இதனால் அடிக்கடி தசைப்பிடிப்பு,மரத்து போதல்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே நரம்புகள் பலமடைய கொத்து அவரை சாறு எடுத்து பருகுங்கள்.

 

தேவையான பொருட்கள்:

 

1)கொத்து அவரை – பத்து

2)எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்

3)தூயத் தேன் – ஒரு ஸ்பூன்

 

தயாரிக்கும் முறை:

 

முதலில் பத்து கொத்து அவரையே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

 

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.

 

அடுத்து ஒரு கிண்ணத்தில் கொத்து அவரைக்காய் சாறை வடித்துக் கொள்ளுங்கள்.பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் பாதி எலுமிச்சை சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு ஒரு தேக்கரண்டி தூயத் தேனை அதில் கலந்து குடித்தால் நரம்புகள் பலப்படும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)சுக்கு – ஒரு துண்டு

2)திப்பிலி – இரண்டு

3)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி

 

தயாரிக்கும் முறை:

 

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

 

பிறகு ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு மற்றும் இரண்டு திப்பிலியை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

 

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்த பொருட்களை சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் நரம்புகள் பலப்படும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)வெற்றிலை – ஒன்று

2)தேன் – ஒரு தேக்கரண்டி

 

தயாரிக்கும் முறை:

 

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு ஒரு வெற்றிலையை அதில் நறுக்கி சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் பலவீனமான நரம்புகள் பலப்படும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)பேரிச்சம் பழம் – இரண்டு

2)பால் – ஒரு கிளாஸ்

 

தயாரிக்கும் முறை:

 

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் இரண்டு பேரிச்சம் பழத்தை போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் நரம்புகள் பலமடையும்.