சிறை கைதிகளுக்கு வெளிவந்த சூப்பர் திட்டம்! இன்று முதல் அமல் அரசு வெளியிட்ட தகவல்!
தமிழ்நாட்டில் முதல் முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிஜிட்டல் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் முதன்முறையாக டிஜிட்டல் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.இந்த நூலகம் முதல் முறையாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கிளை நூலகத்தில் திறக்கப்பட்டது.
நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ரோகினி நவம்பர் 7 ,2018 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.மேலும் இந்த டிஜிட்டல் நூலகத்தை அனைத்து கிராம புறங்களில் உள்ள நூலகத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக மதுரை சிறையில் கைதிகளுக்கு ஆடியோ,வீடியோவுடன் கூடிய நூலகத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புத்தக வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் என எதிர்பார்க்கபடுகின்றது.
நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் மூலமாக சிறையில் உள்ள கைதிகளுக்கு புத்தகம் வாசிப்பு ஆர்வம் அதிகரிக்கும். அவர்களின் அறிவும் மேன்மையடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.