சென்காந்தாள் கிழங்கு சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்தது என்? தெளிவான விளக்கமளிக்கும் பொதுநல மருத்துவர்!

0
197
A teenager died after eating senkanthal yam? Clear Explained General Practitioner!

சென்காந்தாள் கிழங்கு சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்தது என்? தெளிவான விளக்கமளிக்கும் பொதுநல மருத்துவர்!

செங்காந்தள் செடியின் கிழங்கை சாப்பிட்ட வாலிபர் நேற்று உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இக்கிழங்கு சித்த மருத்துவத்தில் பலரும் பயன்படுத்தி வரும் வேளையில் இவர் ஏன் உயிரிழந்தார் என்பதை பொதுநல மருத்துவர் அப்ரூக் அப்துல்லா விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, செங்காந்தள் என்பது பல ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பயன்படுத்தி வரும் ஓர் மூலிகை. அப்போதைய சித்தர்களை இதைப் பற்றி குறிப்புகளை எழுதி வைத்தும் உள்ளனர்.

இந்த செடியின் மலர் இலை மற்றும் கிழங்கு என அனைத்தும் மருத்துவத்திற்கு உதவுகிறது. மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு இச்செடியினை வைத்து மருந்து தயாரிப்பது வழக்கம். குறிப்பாக இச்செடியின் கிழங்கில், கோல்சிசின் என்ற மருந்து பொருள் உள்ளது. மேலும் இது கீழ்வாதம் மற்றும் மெடிடேரியன் என்ற நோய்க்கு மருந்து தயாரிப்பதில் முக்கிய பங்கும் வகிக்கிறது.

இந்த செங்காந்தளை நாம் எந்த முறையில் எடுத்துக் கொண்டாலும் அதற்குரிய அளவீடுகளிலேயே உட்கொள்ள வேண்டும். மீறி ஒரு டோஸ் அதிகமாக உட்கொண்டால் கூட உயிருக்கே ஆபத்தாகிவிடும். எனவே இந்த மருந்துகளை உட்கொள்ளும் பொழுது மருத்துவரின் பரிந்துரை மிகவும் முக்கியம். அனைத்து கீழ்வாத நோய்க்கும் 1.2 மில்லிகிராம் மட்டுமே கோலைசிசின் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதன் கிழங்கில் 350 மில்லி கிராம் வரை கோல்சிசின் உள்ளது.

இதனை அந்த வாலிபர் அதிக அளவில் உட்கொண்டதால் உயிரிழந்திருக்க கூடும். முதலில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். அதற்குப் பின் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் செயலிழக்க ஆரம்பித்து விடும். பல்வேறு இணையத்தில் வரும் செய்திகளை பார்த்துவிட்டு தானாக இவ்வாறு மருந்துகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது. முறையான மருத்துவ வருடம் இது குறித்து ஆலோசனை செய்த பிறகு இவ்வாறான மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.