Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Arrest

Arrest

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சரவணன் வயது 48 என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் வழங்கி புதுக்கோட்டை மகிலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்தவர் சரவணன் வயது 48. இவர் அதே பகுதியில் தனக்கு எதிர் வீட்டில் வசித்து வரும் தம்பதியினரின் ஐந்து வயது சிறுமியை கடந்த 10.6.2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது

பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது சிறுமி பலத்த காயங்களுடன் இருந்துள்ளார். இது குறித்து கேட்டபோது சிறுமி நடந்த இதை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு புதுக்கோட்டை மயிலா நீதி மன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பு அளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அபராத தொகை இரண்டு லட்ச ரூபாய் மட்டும் இல்லாது அரசு கூடுதலாக 2.5 லட்சம் ரூபாய் சேர்த்து 4.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

Exit mobile version