Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கைப்பேசியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்! மனைவி ஆத்திரத்தால் எடுத்த அந்த முடிவு!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பார்ம் தெருவில் வசித்து வருபவர் சேகர் இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் சேகர் தான் குடியிருக்கும் அதே குடியிருப்பில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் குளிக்கும் போது தன்னுடைய கைபேசியில் ஆபாசமாக வீடியோ எடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

அவருடைய இந்த செயலை சேகரின் மனைவியிடம் தெரிவித்து எச்சரித்திருக்கிறார் அந்தப்பெண் இதன்காரணமாக, அதிர்ச்சியடைந்த சேகரின் மனைவி தன்னுடைய கணவரின் கைபேசியை அவருக்கே தெரியாமல் எடுத்து ஆய்வு செய்திருக்கிறார்.

இதில் தன்னுடைய தங்கை உடை மாற்றும் வீடியோ மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்களின் ஒருசில முகம் சுழிக்க வைக்கும் ஆபாச வீடியோக்களும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சேகரின் மனைவி இதுதொடர்பாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் கைப்பேசி யையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். அதனை ஆய்வு செய்தபோது அதில் பல பெண்கள் குளிப்பது மட்டுமல்லாமல் தங்கள் வீட்டின் முன் கோலம் போடுவது போன்ற ஆபாச வீடியோக்கள் பதிவு செய்து இருப்பது தெரிய வந்தது.

சேகர் அந்த ஆபாச வீடியோக்கள் உள்ளிட்டவற்றை தன்னுடைய வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார் என்றும், சொல்லப்படுகிறது. சேகரின் மனைவி வழங்கிய புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ஷீலா மேரி வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கின்றார்.

சேகரும், அவருடைய மனைவியும், 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களுக்கு 2 வயதில் குழந்தையும் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சேகர் இதுபோன்ற வக்கிரா எண்ணத்துடன் செயல்பட்டது அந்த பகுதியில் இருக்கின்ற பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. அக்கம்பக்கத்து பெண்களை தன்னுடைய கைபேசியில் ஆபாச வீடியோ எடுத்த தன்னுடைய காதல் கணவனை தைரியமாக காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்த மனைவியை காவல்துறை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

Exit mobile version