Mettur thermal power station: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் திடீர் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. 840 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள ராட்சத இயந்திரங்கள் சரிந்து விழுந்து இருக்கிறது. இதனால் மிகப் பெரிய புகை அனல் மின் நிலை முழுவதும் பரவி வருகிறது. நேற்று நடந்த இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் தீயணைப்பு துறையினர். அதாவது, மின்சாரம் உற்பத்தி செய் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்த நிலக்கரிகளை ஆவி ஆக்குவதற்காக பயன்படுத்தப்படும் மிகப் பெரிய அனலை உண்டாகும் இயந்திரங்கள் நேற்று சரிந்து இருக்கிறது. அந்த இயந்திரத்தில் சூடாக இருக்கும் பல டன் எடை கொண்டதாக நிலக்கரிகள் கீழே கொட்டி இருக்கிறது.
அப்போது அங்கு பணியில் இருந்த பணியாட்கள் புகை மண்டலத்தில் சிக்கி இருக்கிறார்கள். எனவே, விபத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். எனவே, இறந்த நிலையில் இருவர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும், மூன்று நபர்கள் புகையினால் பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும், அங்கு விபத்தினால் சரிந்த நிலக்கரிகளை முழுவதும் அப்புறப்படுத்தினால் மட்டுமே எத்தனை பேர் விபத்தில் சிக்கி இறுக்கி உள்ளார்கள் என்பதை அறியடியும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. அச் செய்தியை அறிந்து உயிரிழந்தவர்கள் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.