பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து மற்றும் அரசு பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒன்பது பேர் பலி!
இந்த மாதத்தில் ஆயுத பூஜை,விஜயதசமி போன்ற பண்டிகைகள் முதல் வாரத்திலேயே வருவாதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையும் சேர்த்து தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது அதனால் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து சென்றனர்.அந்த பேருந்தில் 43 மாணவர்களும் ஐந்து ஆசிரியர்கள் உட்பட 51 பேர் சென்றனர்.
இந்நிலையில் அந்த பேருந்து பாலக்காடு வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது.மேலும் அதே பகுதியில் கேரள அரசு பேருந்து எதிரில் வந்து கொண்டிருந்தது.அப்போது அதிவேகத்தில் வந்த சுற்றுலா பேருந்து நிலைதடுமாறி அரசு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. அந்த விபத்தில் சுற்றுலா பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது.
அந்த விபத்தில் சுற்றுலா பேருந்தில் இருந்த ஐந்து மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 49 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்துகளில் இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.