வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

0
114
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உலகையே உலுக்கிய இந்த வெடி விபத்தில் 100 பேர் பலியானதாகவும் 4,000 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 149 ஆக அதிகரித்திருக்கிறது.
பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் லெபனான் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில்  பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கைப்படி விபத்து தொடர்பாக சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனக் கூறினார்.