Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முறையாக இ-பாஸ் பெறாமல் மக்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறிய டிராவல் ஏஜென்சி கையும்களவுமாக பிடிபட்டார்?

கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இருந்து தமிழகத்தில் பிற பகுதிகளுக்குச் செல்ல விரும்புவோர் இ பாஸ் பெற்றுத்தந்து அழைத்துச் செல்வதாகக் கூறி வாட்ஸ்அப் (whatsapp) எண்ணுக்கு தகவல் பரவி வந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கா.அன்பழகன் ,உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் சுப்பிரமணியனுக்கு உத்தரவிட்டார்.

அவரக்குறிச்சி கிராம உதவியாளர் சுப்ரமணியன் அந்த எண்ணுக்கு பேசி , சென்னைக்கு செல்ல எவ்வளவு ஆகும் என்று கேட்டபொழுது ரூபாய்.2 ஆயிரம் ஆகும் என கூறியுள்ளனர். அந்த பணத்தை டி.டி.டிராவல்ஸ் செலுத்தினால் அன்று மாலையே அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார். அதன்படி சுப்பிரமணியன் ரூபாய்.2000 பணத்தை நேற்று முன்தினம் செலுத்தியவுடன் ஒரு கார் வந்தது.

அந்த காரை வெங்கடேஷ் என்பவர் ஓட்டினார். கோட்டாட்சியர் சுப்பிரமணியன் அவர்களும் ஏறிக்கொண்டனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் திட்டமிட்டபடி போலீசார் காரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.இ-பாஸ் இல்லாமல் மூன்று பேரை காரில் சென்னைக்கு அழைத்து செல்ல முயன்றததை தெரிய வந்ததையடுத்து காரையும் பறிமுதல் செய்தனர்.மேலும் ஓட்டுநர் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர் மீதும் விசாரணை செய்து வருகின்றனர்.

கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் பரிந்துரையின் பெயரில் அரவக்குறிச்சி போலீஸார் , இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version