Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்க மிகவும் சுலபமான பரிகாரம்!

#image_title

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்க மிகவும் சுலபமான பரிகாரம்!

குடும்ப முன்னேற்றத்திற்கு வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்க வேண்டும். ஆனால் கண் திருஷ்டி, தீய சக்தி, தரித்திரம் ஆகியவை தங்கி இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய், பணக் கஷ்டம் ஏற்படும். நிம்மதி இன்றி தவிப்பார்கள்.

இவை எல்லாம் நிகழக் கூடாது என்றால் வீட்டில் மிகவும் சுலமான பரிகாரம் ஒன்றை செய்ய வேண்டும். இதை இரவு நேரத்தில் செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்.

இதை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். உதாரணத்திற்கு இன்று இரவு செய்ய நினைக்கிறீர்கள் என்றால் இரவு உணவை உட்கொண்ட பின்னர் செய்யவும்.

அதாவது சாப்பிட பின்னர் யாரும் பயன்படுத்தாத ஒரு கண்ணாடி கிளாஸ் ஒன்றை எடுத்து அதில் எச்சில் படாத தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் அளவு கல் உப்பு சேர்த்து கொள்ளவும்.

இதை வீட்டு வாசலுக்கு கொண்டு சென்று கிளாஸின் வாய் பகுதியை கை வைத்து அடைத்துக் கொண்டு வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் இருக்கக் கூடாது. கண் திருஷ்டி நீங்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அந்த தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

இந்த பரிகாரம் எளிமையாக இருப்பதினால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவை சக்தி வாய்ந்த பரிகாரங்களில் ஒன்று ஆகும்.

Exit mobile version