Bangladesh: வங்கதேசம் டாக்கா நகரில் பெண் பத்திரிகையாளர் மீது அத்துமீறும் போராட்ட கும்பல்கள் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
வங்க தேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுபான்மையினர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக பேரணி நடந்தது.அந்த பேரணியில் இந்துக்கள் மதத்தினர்களுக்கு இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சினமாய் கிறிஷ்ண தாஸ் தலைமையேற்று நடத்தினர். அதில் அவர் வங்கதேச கொடி மீது காவி கொடி ஏற்றி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தால் அவர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டு கைது செய்தது வங்கதேச அரசு. இவரின் கைது நடவடிக்கைக்கு பிறகு தலைநகர் டாக்கா மற்றும் துறைமுக சட்டோகிராம் முதலிய நகரங்களில் வன்முறை விடுத்து உள்ளது.இந்த அசாதாரண நிலை காரணமாக வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆட்சி தலைவராக முகமது யூனுஷ் செயல்பட்டு வருகிறார். இந்த வன்முறையில் அரசு அதிகாரிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதனால் பொது மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். மேலும்,பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இது குறித்து செய்திகள் சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர் மீது போராட்டக்காரர்கள் அத்துமீறு வது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வருகிது.
அந்த வீடியோவில் அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரியவருகிறது. வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்களுக்கு அரசு அதிகாரங்களில் உரிய பதவி, அரசு பணிகளில் முறையான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறப்பட்டு வருகிறது.