சற்றுமுன்: அறிக்கையில் என்ட்ரி கொடுத்த பிரபாகரன்.. எதிரி நாடுகளுக்கு அலார்ட்!! மௌனம் காக்கும் சீமான்!!
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளிவந்ததை அடுத்து அவரது உடல் சரியாக அடையாளம் காண்பிக்க முடியவில்லை.
தற்பொழுது வரை அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் அவரது மறைவு என அனைத்தும் மர்மமாகவே உள்ள நிலையில் பழ. நெடுமாறன் புதிய தகவல் ஒன்றை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாகவும் அவருடைய குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும் தான் நலமாக இருக்கிறேன் என்பதை அவரை தெரிவிக்க சொன்னதாகவும் கூறினார்.
தற்பொழுது வரை அவரை சுட்டுக் கொண்டு விட்டதாக பல வதந்திகள் வெளிவந்த நிலையில் அதற்கு முடிவு கட்டும் விதமாக தற்பொழுது இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்ததோடு தமிழீழ மக்களின் எதிர்காலத்தை நோக்கி அவர் விரைவில் வெளிவருவார் என்றும் கூறினார். அதேபோல விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை.
அத்தோடு இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்த பட்சத்தில் தற்பொழுது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்பு தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதால் அதனை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை இந்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
எனவே இவ்வாறான சூழலில் தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவாளிக்குமாறு தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதை அடுத்து பலர் திகைத்து நிற்கையில் சீமானிடம் இருந்து இதற்கு எவ்வாறான கருத்து இருக்கும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.ஆனால் அவர் மௌனம் காத்து வரும் நிலையில், அவருடைய கட்சியை சேர்ந்தவர் போலியான நம்பிக்கைகளை விதைப்பது மடைமாற்றம் செய்யவே அன்றி, வேறில்லை என இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.