Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சமாதிக்கு வந்த ஜெயலலிதா மகள்!

A woman arrived marina and said that she is the daughter of Former CM Jayalalithaa

இந்திய அரசியலில் இரும்பு மனுஷி என அனைவராலும் போற்றப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

இவர் அதிகாரப்பூர்வமாக திருமணம் ஆனவர் என்பதற்கு எந்தவித சான்றும் கிடையாது. எனவே இவர் மரணம் அடையும் வரை செல்வி.ஜெயலலிதா என்றே அழைக்கப்பட்டார்.

ஆனால் இவருடைய திருமணம் குறித்தும், குழந்தை குறித்தும் அதிகப்படியான வதந்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன.

ஜெயலலிதா தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் திருமணம் ஆகாமல் ஒன்றாய் வசித்தது அனைவரும் அறிந்த ஒன்றே.

இவர்களது உறவில் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூட கூறப்பட்டது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை கூட குறிப்பிட்ட காலத்தில் ஜெயலலிதாவின் மகள் என்று கூறினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சர் திடீரென மரணம் அடைந்தார். அப்போது கூட ஜெயலலிதாவின் மகள் என உரிமையோடு கூறி பொதுவெளியில் வந்து யாரும் எந்த சடங்கும் செய்யவில்லை.

ஜெயலலிதா இருந்த போதே கூட ஒரு பெண்ணின் புகைப்படம் ஜெயலலிதாவின் மகள் என சமூக வலைத்தளங்களில் உலா வந்தன.

 

இந்நிலையில் தான் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அம்ருதா என்ற பெண் நான் தான் ஜெயலலிதாவின் மகள் எனவும், டி .என். ஏ பரிசோதனை செய்ய தயார் எனவும் மீடியாவில் பேட்டி கொடுத்தார்.

ஜெயலலிதாவின் உறவினர் சிலரும் இதுக்குறித்து பேட்டி அளித்தனர்.

இதுபோலவே தற்போது பிரேமா என்ற பெண் வந்துள்ளார்.

தீபாவளி அன்று மெரினாவில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதிக்கு ஒரு பெண் வந்துள்ளார்.

அவருக்கு பெங்களூரில் மைசூர் சொந்த ஊர் எனவும், தற்போது பல்லாவரத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மகள் எனக்கூறிய அவர், தன்னை அதிமுகவில் அனைவருக்கும் தெரியும் எனவும் கூறியுள்ளார்.

இதனால் ஜெயலலிதா சமாதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

அதிமுகவில் ஏற்கனவே பல உட்கட்சி பூசல்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இது போன்ற சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

 

 

 

 

 

 

Exit mobile version