செல்பி எடுக்கும் போது 60 அடி பள்ளத்தில் வீழ்ந்த பெண்! இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ!
புனேவில் பெண் ஒருவர் செல்பி எடுக்கும் பொழுது 60 அடி பள்ளத்தில் தவறி விழுந்தநிலையில் அவரை மீட்கும் திக் திக் வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள சில நீர்வீழ்ச்சிகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சியை பார்வையிட நண்பர்கள் குழு சென்றுள்ளது.
அந்த குழுவில் 29 வயதான நஹீன் அமீர் குரேஷி என்ற பெண் செல்பி எடுக்கமுயன்றுள்ளார். அப்பொழுது நஹீன் 60 அடி கொண்ட பள்ளத்தில் தவறி விழுந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்த நஹீன் அவர்களை பள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் பலத்த காயமடைந்த நஹீனை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பலத்த காயம் அடைந்த அந்த பெண் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் நஹீன் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதையடுத்து 60 அடி பள்ளத்தில் தவறி வீழ்ந்த நஹீனை மீட்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் செல்பி எடுக்கும் பொழுது 60 அடி பள்ளத்தில் பெண் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.