Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் விசாரணை!  

A woman on a two-wheeler died! Police investigation!

A woman on a two-wheeler died! Police investigation!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் தீவிர விசாரணை!

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் முதலியார் கோட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன் என்பவர். இவருடைய மனைவி சித்ராதேவி (வயது 49). மேலும் சித்ராதேவி மகளிர்மன்ற நிர்வாகியாக உள்ளார். இவர் பல ஊர்களுக்கு  பயணித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளியூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு சோழவந்தானை நேக்கி சென்று  கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியில்  மதுரை நோக்கி  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்தானது கல்லூரி அருகே  சென்ற போது எதிர்பாராதவிதமாக  சித்ராதேவி சென்ற  இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அந்த விபத்தில் சித்ராதேவி   பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனவும் கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version