Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

6 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி செய்த பெண்… இணையத்தில் வரைலாகும் புகைப்படம்!!

 

6 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி செய்த பெண்… இணையத்தில் வரைலாகும் புகைப்படம்…

 

பெங்களூருவில் வெறும் 6 ரூபாய்க்கு இளம்பெண் ஒருவர் ஆட்டோ சவாரி செய்துள்ளார். அதற்கான புகைப்படத்தையும் இணையத்தில் பதிவிட அது தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது.

 

இந்திய நாட்டின் தொழில்நுட்ப நகரமாக கருதப்படும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எப்பொழுதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பீக் ஹவர்ஸ் என்று கூறப்படும் அவசர வேலை நேரங்களில் பெங்களூருவில் பயணம் செய்வது மிகவும் கடினமான செயல் ஆகும்.

 

பெங்களூருவில் கார், ஆட்டோகளில் பயணம் செய்வதற்கு அதிகம் வசூல் செய்வதாக சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் பெங்களூருவில் பெண் ஒருவர் 6 ரூபாய்க்கு ஊபர் ஆட்டோவில் சவாரி செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.

 

அந்த பெண் பயணம் செய்வதற்காக ஊபர் ஆட்டோவை முன்பதிவு செய்துள்ளார். அப்பொழுது விளம்பரக் குறியீட்டை உள்ளிட்டார். அந்த சமயம் அந்த பெண்ணுக்கு ஜாக்பாட் அடித்தது போல 6 ரூபாய்க்கு பயணம் செய்யலாம் என்று வந்தது. இதையடுத்து அந்த பெண் 6 ரூபாய்க்கு ஊபர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.

 

இந்த தொகை சவாரிக்கான 46.24 ரூபாயை விட குறைவானதாகும். இதையடுத்து இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை அந்த பெண் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவருடைய இந்த பதிவு வைரலானத்தை அடுத்து பலரும் பல வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

Exit mobile version