Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகத்தில் மூவர்ணக் கொடியை பூசிய பெண்ணுக்கு பொற்கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!!

#image_title

முகத்தில் மூவர்ணக் கொடியை வரைந்த சென்ற பெண்ணுக்கு பொற்கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ இன்று வைரலாக பரவியது.

அந்தப் பெண்ணிடம் ஊழியர் உங்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறும் பொழுது இது தேசியக்கொடி என்று அந்த பெண் பதில் சொல்ல ஊழியர் உடனே இது பஞ்சாப் இந்தியா இல்லை என்று பதிலளித்திருக்கிறார் . இந்த வீடியோ பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் பொதுச் செயலாளர் குர்சரண் சிங் கிரேவால் வெளியிட்ட அறிக்கையில், இது சீக்கியர்களின் ஆலயம் அனைவரையும் வரவேற்கிறோம்.

அதிகாரி தவறாக நடந்து கொண்டால்  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.அவள் முகத்தில் இருந்த கொடி அசோக சக்கரம் இல்லாததால் அது நமது தேசிய கொடி அல்ல. இது ஒரு அரசியல் கொடியாக இருந்திருக்கலாம்” என்று கிரேவால் கூறினார்.

Exit mobile version