நீண்ட நாள் கருவளையத்தை ஒரு மணி நேரத்தில் மறையவைக்கும் அற்புத க்ரீம்!!

0
148
A wonderful cream that makes dark circles disappear in an hour!!

 

கண்களுக்கு தேவையான ஓய்வு கொடுக்கவில்லை என்றால் கண்களை சுற்றி கருவளையம் உருவாகிவிடும்.அதேபோல் மன அழுத்தம்,கண்களை பராமரிக்காமை போன்ற காரணங்களாலும் கருவளையம் உண்டாகிறது.

இந்த கருவளையம் மறைய நிறைய கெமிக்கல் க்ரீம்களை பயன்படுத்தி சலித்துவிட்டீர்களா? அப்போ கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறையை பின்பற்றி பாருங்கள்நிச்சயம் கருவளையம் அனைத்தும் விரைவில் மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

1)குங்குமப் பூ
2)துளசி இலை
3)தேன்

செய்முறை:

மிக்ஸி ஜாரில் கால் கைப்பிடி அளவு துளசி இலை,இரண்டு அல்லது மூன்று குங்குமப் பூ சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை கண்களை சுற்றி அப்ளை செய்து பின்பு சுத்தம் செய்தால் கருவளையம் நீங்கும்.

தேவையான பொருட்கள்:

1)நெல்லிக்காய்
2)சர்க்கரை
3)எலுமிச்சை சாறு

செய்முறை:

ஒரு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கண்களை சுற்றி அப்ளை செய்து பின்பு சுத்தம் செய்தால் கருவளையம் நீங்கும்.

தேவையான பொருட்கள்:

1)கேரட்
2)பீட்ரூட்
3)தேன்

செய்முறை:

ஒரு கேரட் மற்றும் ஒரு சிறிய சைஸ் பீட்ரூட்டை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கண்களை சுற்றி அப்ளை செய்து வாஷ் ;பண்ணினால் கருவளையம் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:

1)உருளைக்கிழங்கு
2)தேன்

செய்முறை:

ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கண்களை சுற்றி அப்ளை செய்தாள் கருவளையம் நீங்கும்.