வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுவை 2 நிமிடத்தில் வெளியேற்றும் அற்புத பானம்!!

0
76
#image_title

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுவை 2 நிமிடத்தில் வெளியேற்றும் அற்புத பானம்!!

இன்றைய கால வாழ்க்கை முறையில் நோய் வாய்ப்படுவது எளிதாகி விட்டது.எந்தளவிற்கு நாம் இயற்கைக்கு மாறான வாழ்க்கையை வாழ்கின்றோமோ அந்தளவிற்கு நாம் பல ஆபத்துகளை சந்திப்போம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

நாவீன கால வாழ்க்கை முறையில் ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் நாம் உடல் சார்ந்த பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம்.துரித உணவுகளால் மலச்சிக்கல் பாதிப்பு,குடல் வீக்கம்,செரிமான பிரச்சனை உள்ளிட்டவைகளை நாம் சந்தித்து வருகிறோம்.

மேலும் வாயு பிரச்சனை என்பது அனைவருக்கும் சங்கடத்தை தரும் ஒன்றாக இருக்கிறது.அடிக்கடி வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது.இதனால் மன உளைச்சல்,மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்பட்டு பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் சூழல் உருவாகி விடும்.இதை சரி செய்ய இயற்கை வழிகளை பாலோ செய்தால் உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சீரகம் – 1 தேக்கரண்டி

*பெருஞ்சீரகம்(சோம்பு) – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி

*கற்கண்டு – சிறிதளவு

செய்முறை:-

1.ஒரு பவுலில் 1 தேக்கரண்டி அளவு சீரகம்,1 தேக்கரண்டி அளவு சோம்பு,1 தேக்கரண்டி அளவு கொத்தமல்லி விதைகளை சேர்த்து தண்ணீர் 1 1/2 டம்ளர் சேர்த்து இரவு முழுக்க ஊற விடவும்.

2.அடுத்த நாள் காலையில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஊறவைத்துள்ள சீரகம் + சோம்பு + கொத்தமல்லி தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.தேவைப்பட்டால் 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடலாம்.

3.பிறகு அடுப்பை அணைத்து அந்த பானத்தை ஒரு டம்ளரில் வடிகட்டி கொள்ளவும்.சுவைக்காக கற்கண்டு அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.சர்க்கரை நோயாளிகள் வெல்லத்தை தவிர்ப்பது நல்லது.

சீரகம்: இவை செரிமான பிரச்சனையை குணமாக்கும் தன்மை கொண்டது.இந்த சீரகத்தில் அதிகளவு இரும்பு சத்து,புரதம்,நார்சத்து,பொட்டாசிம்,செலினியம்,வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அடங்கியுள்ளன.இவை உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சோம்பு: இதில் அதிகளவு பொட்டாசியம்,மாங்கனீசு,துத்தநாகம்,இரும்புச்சத்து,நார்ச்சத்து மற்றும் தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இவை வயிறு உப்புசம்,மலச்சிக்கல்,வாயு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

கொத்தமல்லி விதை: இதில் அதிகளவு வைட்டமின் ஏ,வைட்டமின் பி1,இரும்புச்சத்து,கால்சியம், பாஸ்பரஸ்,கார்போஹைட்ரேட்,புரோட்டீன்களை கொண்டிருக்கிறது.இவை இரத்தத்தின் சர்க்கரை அளவை பராமரிக்கவும்,உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைக்கவும்,செரிமான பிரச்சனை மற்றும் வாயு பிரச்சனைகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.