Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து!

A worker was killed when a car collided with a motorcycle! An accident in Karur district!

A worker was killed when a car collided with a motorcycle! An accident in Karur district!

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து!

கரூர் மாவட்டம் பத்தாம் பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில்  தாந்தோணி மலையருகே உள்ள வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மேலும் அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. மகாலிங்கம் என்பவர் இயக்கி வந்தார். கார்  ஆனது தனது கட்டுப்பாட்டை இழந்து மகாலிங்கம் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. மோட்டார் சைக்கிளில் இருந்து மகாலிங்கம் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த மகாலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். தாந்தோணி மலை போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த போலீசார் மகாலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version