Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடனை கேட்டதால் இளம்பெண் கடத்தி கொலை!! உடலை துண்டு துண்டாக வெட்டிய நண்பர்!!

A young girl was kidnapped and killed for asking for a loan!! The friend who cut the body into pieces!!

A young girl was kidnapped and killed for asking for a loan!! The friend who cut the body into pieces!!

கடனை கேட்டதால் இளம்பெண் கடத்தி கொலை!! உடலை துண்டு துண்டாக வெட்டிய நண்பர்!!

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால், இளம்பெண் ஒருவரை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள பாலக்கடவு பகுதியை சேர்ந்தவர் சனல். இவருடைய மனைவி ஆதிரா. சனலுக்கு அகில் நண்பராவர். அகிலும், ஆதிராவும் அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர்.

அகிலுக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் ஆதிராவிடம் கடனாக பணம் மற்றும் நகைகளை பெற்றுள்ளார். ஆதிராவும் கணவரின் நண்பர் என்ற முறையில் கேட்கும்போது எல்லாம் பணம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஆதிரா கொடுத்த பணத்தை, அகிலிடம் திரும்ப கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 29 ஆம் தேதியிலிருந்து ஆதிராவை காணவில்லை.  அவரது கணவர் தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதனிடையில் ஆதிராவின் செல்போனை ஆராய்ந்தபோது அவர் கடைசியாக அகிலிடம் பேசியது தெரிய வந்துள்ளது. இதை பற்றி அகிலிடம் விசாரிக்க சென்றபோது அவர் வீட்டில் இல்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது ஆதிராவை, அகில் காரில் கூட்டி சென்றதாக கூறினார்கள்.

மேலும், அகிலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று காலை அவரை கைது செய்து விசாரித்தபோது, ஆதிரா கொடுத்த கடனை கேட்டு தொந்தரவு செய்ததாகவும், அதனால் அவரை கடத்தி அதிரப்பள்ளி ஆற்றுபகுதிக்கு கூட்டி சென்று, அங்கு அவரை கொலை செய்து, துண்டு துண்டாக ஆற்றில் வீசி விட்டதாக அகில் கூறினார்.

இதனை தொடர்ந்து அதிரப்பள்ளி ஆற்றுபகுதிக்கு சென்ற போலீசார் அங்கு ஆதிராவின் சில உடல் பாகங்களை கண்டெடுத்தனர். மற்ற பாகங்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version