Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதை வீடியோ காலில் காட்டு! சிங்கப்பூர் காலால் பெண்ணிற்கு நடந்த விபரீதம்!

A young girl's tragic end due to a video call from Singapore! Motherless children!

A young girl's tragic end due to a video call from Singapore! Motherless children!

அதை வீடியோ காலில் காட்டு! சிங்கப்பூர் காலால் பெண்ணிற்கு நடந்த விபரீதம்!

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பெரிய விலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஞானபாக்கியபாய். செந்தில்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அவரது மனைவி ஞானவாக்கியபாய் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்சிங்கப்பூரிலிருந்து தினமும் நள்ளிரவில் செந்தில் தனது மனைவியுடன் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசி வருவார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தர்.

அப்போது பணத்தை சேமிப்பதா  அல்லது நிலம் வாங்கி போடுவதா என்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஞானபாக்கியபாய்வின்  பின்னால் ஜன்னல் கம்பியில் கட்டப்பட்டிருந்த திரைத்துணி காற்றினால் அசைந்து கொண்டிருந்தது. அதனைக் கண்ட செந்தில் மனைவியின் பின்னால் யாரோ மறைந்திருப்பதாக சந்தேகதம் அடைந்த செந்தில் மனைவி படுக்கை அறையை முழுமையாக காண்பிக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் மனைவி அரை முழுவதும் காண்பித்த நிலையில் சந்தேகம் தீராத செந்தில் மனைவியிடம் செல்போன் கேமராவை கட்டிலுக்கு அடியில் காண்பிக்க வேண்டும் எனவும் கூறினார். கணவன் தன் நடத்தையில் சந்தேகப்படுவதை அறிந்த மனைவி ஞானபாக்கியபாய் கட்டலுக்கு அடியிலும் யாரும் இல்லை எனவும் உறுதி செய்தார். பின்னர் சந்தேக கணவர் வாட்ஸ் அப் வீடியோ கால்லை துண்டித்த நிலையில் செல்போனை கீழே போட்டுவிட்டு இணைப்பை துண்டித்ததால்.

மனைவி இணைப்பைத் துண்டித்ததால் அவரை சமாதானப்படுத்த பல முறை செல்போனில் செந்தில் அழைத்துள்ளார். ஆனால் மன உளைச்சலுக்கு உள்ளான ஞானபாக்கியபாய் கன அழைப்பை ஏற்கவில்லை. இந்நிலையில் பக்கத்தில் இருந்த செல்போன் இருக்க அழைத்த செந்தில் மனைவியை செல்போனை எடுக்க மறுப்பதாக விவரித்து வீட்டில் சென்று பார்க்குமாறு கூறினார். அப்போது அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் செந்தில் வீட்டு கதவை தட்டி பார்த்துடன் எவரும் திறக்காத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஞானபாக்கியபாய் தூக்கிட்டு நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார்.

மேலும்  இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இட த்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அதே நேரத்தில் ஆத்திரக்கார தந்தையின் சந்தேகத்தால் தாய் உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதத்தால் அவர்களது இரண்டு குழந்தைகளும் தாயின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version