Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேரள மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்!

#image_title

கேரள மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்.

கேரள மாநிலம் அதிரப்பள்ளி மலக்கம்பாறை பகுதியில் உள்ள சாலையில் திருச்சூர் மாவட்டம் முண்டூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று வழிமறித்து நிற்பதை கண்ட இளைஞர்கள், இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை தாக்குவதற்கு யானை ஓடவே, இளைஞர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

எனினும் தங்கள் இரு சக்கர வாகனங்களை மீட்பதற்காக யானை அங்கிருந்து செல்லும் வரை இளைஞர்கள் காத்திருந்து பின்னர் தங்கள் வாகனங்களை மீட்டனர். யானையிடமிருந்து இளைஞர்கள் நூலிழையில் உயிர் தப்பிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version