Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை!

A young man was killed in a collision with a standing vehicle! Police investigation!

A young man was killed in a collision with a standing vehicle! Police investigation!

நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பர்னிச்சர் ஏற்றிக்கொண்டு பவானி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் தேவண்ண கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவர் அவரத்தின் மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்தார்.அப்போது  அந்த மோட்டர்சைக்கில் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதியது.

அந்த விபத்தில் பழனியப்பன் பலத்த காயமடைந்தனர்.உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைகாக சேர்த்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version