தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!!

0
226
#image_title

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.

ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சுமார் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அதில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தைச் சேர்ந்த நத்தம் கிராமம் பகுதியில் உள்ள தெளபீக் ராஜா என்பவர். இன்று காலை கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த கேணிக்கரை போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உடன் சிகிச்சையில் இருக்கும் நபர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.