Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி இதற்கு ஆதார் எண் அவசியம் இல்லை.. வெளியான புதிய தகவல்!!

#image_title

இனி இதற்கு ஆதார் எண் அவசியம் இல்லை.. வெளியான புதிய தகவல்!!

நாட்டில் ரேஷன் கார்டு,மின்கட்டணம் செலுத்தும் அட்டை,வங்கி கணக்கு எண் என்று அனைத்திலும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு விட்டன.அதேபோல் நமக்கு முக்கிய அடையாளமாக திகழும் வாக்காளர் அட்டையில் வாக்காளர்கள் தங்களது ஆதார் இணைக்க வேண்டுமென்று கடந்த 2021 அன்று நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்ட திருத்த மசோதா இயற்றப்பட்டது.அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மூலம் தற்பொழுது நாட்டில் உள்ள பல மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்க முக்கிய காரணம் பல வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருக்கும் நபர்கள் தேர்தலில் பலமுறை வாக்களிப்பது,ஒருவர் பல தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பது ஆகியவை தடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் ஒருவர் புதிதாக வாக்காளர் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் படிவத்தில் ஆதார் எண் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில்
புதிதாக வாக்காளர் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் படிவத்தில் ஆதார் எண் கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளதை சுட்டி காட்டிய அவர் வாக்காளர் பதிவு சட்டம் 2022 படி ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று தெரிவித்தார்.இப்படி இருக்கையில் புதிதாக வாக்காளர் அட்டை பெறுவதற்கு எதற்கு ஆதார் எண் கேட்கப்படுகிறது? இந்த விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.இந்த விசாரணையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புதிதாக வாக்காளர் அட்டை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற முறை மாற்றப்படும்.அதேவேளையில் வாக்காளர் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் படிவத்தில் சில தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version