Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Aadhaar Thai card is no longer required for maternity! A sudden announcement by the minister!

Aadhaar Thai card is no longer required for maternity! A sudden announcement by the minister!

இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்மணி கர்நாடகாவில் வசித்து வந்துள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வலி ஏற்பட்டதால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். ஆனால் அங்குள்ளவர்களும் சிகிச்சை கொடுக்காமல் நீங்கள் சென்று ஆதார் அட்டை , தாய் அட்டை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். அது இருந்தால்தான் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இவர் தமிழ்நாட்டை சேர்ந்ததால் இவருக்கு அவர்கள் கேட்கும் எந்த ஒரு ஆவணமும் இல்லை. இதனால் நிறைமாத கர்ப்பிணி வலியுடன் வீடு திரும்பினார். அவ்வாறு திரும்பிய நிலையில், அவருக்கு வலி அதிகரித்துவிட்டது.வழி அதிகரிக்கவே அங்குள்ள அக்கம் பக்கத்தினர் பிரசவம் பார்த்து உள்ளனர். ஆனால் இவருக்கு இரட்டை குழந்தை பிறந்ததால் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதிக உதிரப்போக்கு காரணத்தால் பெண்மணி உயிரிழந்து விட்டார்.

இவர் பிரசிவித்த இரு ஆண் குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தது. மனைவி மற்றும் குழந்தைகளை  பறிகொடுத்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர்.மேலும் சிகிச்சை அளிக்காத செவிலியர்கள் மீதும் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து சிகிச்சை அளிக்காதிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் உட்பட அனைவரையும் பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இது குறித்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இனி எந்த ஒரு கர்ப்பிணி வந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மகப்பேறு சிகிச்சை பெறுவதற்கு இனி ஆதார் மற்றும் தாய் அட்டை அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

Exit mobile version