Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பான் கார்டில் உங்கள் பெயர் தவறாக உள்ளதா? 5 நிமிடம் போதும்

பான் கார்டில் உங்கள் பெயர் தவறாக உள்ளதா? 5 நிமிடம் போதும்

PAN(Permanent Account Number) இந்தியாவில் வருமான வரி செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய ஆவணமாகும்.ஆனால் இவை வரி செலுத்துவதற்கு மட்டும் பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறான சிந்தனை.

பான் கார்டு பணப் பரிவர்த்தனை,வங்கியில் கடனுதவி பெறுவதற்கு பயன்படுத்தப்படும் நம்பகமான ஒரு ஆவணமாகும்.பான் கார்டில் பத்து எழுத்துக்கள் கொண்ட நிரந்தர குறியீடு இருக்கும்.ஒருவருக்கு பான் கார்டு வழங்கப்பட்டு விட்டால் அவை நிரந்தமாகும்.இதற்கு பதில் வேறு பான் கார்டை பெற முடியாது.

இந்த பான் கார்டை மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு வரும் NSDL அமைப்பு வழங்குகிறது.பான் கார்டு பயன்படுத்துவதன் மூலம் வரி ஏய்ப்பு ஏற்படுவது மறைமுகமாக தடுக்கப்படுகிறது.இவ்வாறு பல முக்கிய விஷயங்களுக்கு பயன்படும் பான் கார்டில் எந்த பிழையும் இல்லாமல் இருப்பது அவசியமாகும்.

ஒருவேளை பான் கார்டில் உங்கள் பெயரில் பிழை இருந்தால் கீழ்கண்ட வழிமுறைப்படி மாற்றிக் கொள்ளலாம்.

படி 01:

முதலில் NSDL-இன் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

படி 02:

பிறகு “Apply Online” என்பதை கிளிக் செய்யவும்.பிறகு “Application Type” என்றார் மெனுவிற்கு கீழ் இருக்கின்ற “Changes or correction in existing PAN Data/ Reprint of PAN Card (No changes in existing PAN data)” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3:

அடுத்து “Category” என்ற மெனுவில் உள்ள “Individual” என்பதைத் செலக்ட் செய்து பெயர்,பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி,பான் எண் உள்ளிட்டவற்றை என்டர் செயயும்.

படி 04:

பிறகு “By submitting data to us and/or using our NSDL e-Gov TIN website” என்ற செக்பாக்ஸ் கிளிக் செய்து கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்து Submit” என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 05:

அதன் பின்னர் ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.பிறகு தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு தகவல் அனுப்பப்படும்.

படி 06:

பின்னர் “Continue with PAN Application Form” என்பதைக் கிளிக் செய்து தங்கள் பெயரில் உள்ள பிழையை மாற்றுங்கள்.இவ்வாறு திருத்தப்பட்ட பான் கார்டு தபால் வழியாக தங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Exit mobile version