இனி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க இது கட்டாயமில்லை! மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
127

பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து பல அதிரடி திட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் பல அதிரடி திட்டங்களால் எதிர்க்கட்சிகள் முதல் உறுதியானவர்கள் வரையில் அனைவரும் நாள்தோறும் பதறிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படி மத்திய அரசு கொண்டு வந்த முக்கியமான திட்டங்களில் ஒன்று ஆதாரம் அட்டை திட்டம் இந்த ஆதார் அட்டை இல்லையென்றால் தற்சமயம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை இழக்க நேரிடலாம் என்ற அளவிற்கு இந்த ஆதார் எண் முக்கியமானது என்று ஆகிவிட்டது.

முதலில் உச்சநீதிமன்றம் இந்த ஆதார் அட்டை தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியது. இதனை கவனித்த மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தில் ஆதார் மசோதாவை நிறைவேற்றியது அதன்மூலம் அத்தியாவசிய தேவைகள் அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது.

அந்த வகையில், நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு கேள்விக்கு பதில் வழங்கினார்.

அதாவது மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்துவது புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலைக்கு செல்லும் ஊர்களில் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் உள்ள சிக்கலை மனதில் வைத்து இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வகுத்திருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதாவது நாட்டில் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 80 கோடி ரேஷன் பயனாளிகளில் 77 கோடி பேர் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி ஒரு புலம்பெயர் தொழிலாளி தான் வேலைக்கு செல்லும் ஊரில் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். அதே சமயம் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் ஊர்களில் தங்கள் பங்கான உணவு தானியங்களை பெற்றுக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் போது ரேஷன் பொருட்கள் வாங்க புதிய ரேஷன் கார்டு தர தேவையில்லை என சொல்லப்படுகிறது. ஏற்கனவே தங்களிடமிருக்கின்ற தங்களுடைய ரேஷன் கார்டின் எண்ணையோ அல்லது ஆதார் எண்ணையோ எந்த ரேஷன் கடையிலும் தெரிவித்து பயோமெட்ரிக் முறையின் மூலமாக அடையாளத்தை உறுதி செய்து கொண்டு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.

அதே ஊரில் இருந்தாலும் கூட ரேஷன் கார்டு கொண்டு செல்லாமல் ஆதார் எண்ணை தெரிவித்து பயோமெட்ரிக் மூலமாக அடையாளத்தை உறுதி செய்து கொண்டு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகின்றது.

இதன் மூலமாக புதிய ரேஷன் கார்டு பெறும் பிரச்சினைக்கும், போலி ரேஷன் கார்டு பிரச்சினைக்கும், தீர்வு காணமுடியும் என சொல்கிறார்கள். தொழில்நுட்பம் அடிப்படையிலான ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் இது சாத்தியமாகியிருக்கிறது.

இதுவரையில் 7 கோடி பேர் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் வாங்கி பலனடைந்திருக்கிறார்கள் நோய்த்தொற்று காலத்தில் 19 மாதங்களாக ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது.

இதன் காரணமாக, யாரும் பட்டினி கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. பயனாளிகளுக்கு உணவு தானியத்திற்கு பதிலாக பணம் கொடுக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடமில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.