Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆதார் எண்ணை இவர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்..! அதிரடியாக வெளியாகியுள்ள அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் நிரந்தரப் பதிவு எண்ணை வைத்து இருக்கும் தேர்வர்கள் தங்கள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி செயலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், போட்டித் தேர்வுகளின் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. ஏற்கெனவே தேர்வாணையத்தின் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி நாளிட்ட செய்தி வெளியீட்டு அறிவிப்புப்படி ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தனது நிரந்தரப் பதிவுடன் (ONE TIME REGISTRATION) தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

ஒரு ஆதார் எண்ணை ஒரு நிரந்தரப் பதிவுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் ஆதார் சட்டம் 2016-ன் படி விண்ணப்பதாரர்களின் ஆதார் குறித்த விவரங்கள் தேர்வாணையத்தால் சேமிக்கப்படமாட்டாது. ஆதார் எண்ணை விண்ணப்பதாரரின் நிரந்தரப் பதிவில் (OTR) இணைப்பதற்கான வழிமுறைகள், அறிவுரைகள் மற்றும் உறுதிமொழி குறித்த விவரங்கள் யாவும் தேர்வாணையத்தின் இணையதள முகவரி www.tnpscexams.in இல் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்தான பின்னூட்டத்தினை (FEEDBACK) அளிக்கவும் அந்த இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வாணையத்தில் நிரந்தரப் பதிவு எண்ணை (OTR) வைத்து இருக்கும் தேர்வர்கள் தங்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version