ஆடி அமாவாசை!! புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு பக்தர்கள் நாளை முதல் 6 நாட்கள் வரை செல்ல அனுமதி!! 

0
97
Aadi Amavasi!! Devotees are allowed to visit this famous temple for 6 days from tomorrow!!

ஆடி அமாவாசை!! புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு பக்தர்கள் நாளை முதல் 6 நாட்கள் வரை செல்ல அனுமதி!! 

ஆடி அமாவாசை வருவதால் புகழ் பெற்ற சிவன்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 இந்தமுறை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. புகழ்பெற்ற சிவன் கோவிலான இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம். இது மலை பகுதியில் அமைந்து உள்ளதால் மேலே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.

தற்போது ஆடி அமாவாசை வர உள்ளதால் அங்கு மிகவும் விசேஷமாக உகந்த தினமாக சதுரகிரியில் கருதப்படுகிறது. இதன் காரணமாக அமாவாசை அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலையேறி வழிபாடு செய்வது எப்போதும் வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் ஆடி அமாவாசை வருகின்ற ஆகஸ்ட் 16-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த திருவிழாவிற்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆடி அமாவாசை திருவிழாவை ஒட்டி நாளை ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 6 நாட்கள் சதுரகிரி சுவாமிமலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள்    வனத்துறையினர் விதித்துள்ள  கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை.

பக்தர்கள் மலைமேல் தங்குவதற்கு அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. இந்த 6 நாட்களில் மழை வந்தால் அனுமதி மறுக்கப்படும். வழியில் தென்படும் மலை ஆறுகளில் பக்தர்கள் குளிக்க கூடாது.

அதே போல பத்து வயதிற்கு உட்பட்டோரும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் மலையில் ஏற அனுமதி இல்லை. மேலும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையற அனுமதிக்கப்படுவர்.

மேலும்  பக்தர்கள் சாமி தரிசனம் செய்த உடன் மலையில் இருந்து உடனடியாக இறங்கி விட வேண்டும்.போன்ற கட்டுப்பாடுகளுடன் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

ஆடி அமாவாசை முன்னிட்டு மதுரை, விருதுநகர், திருமங்கலம், உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் தற்போது செய்து வருகின்றனர்.