காஞ்சிபுரம் தியாகி விசுவதாஸ் நகரில் முத்துமாரியம்மன் கோவிலிருக்கிறது இந்த கோவிலில் ஆடி மாத கூழ் வார்த்தல் உற்சவம் மிகச்சிறப்பாக நடந்தது.
இதனை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
அதன் பிறகு நவரத்தினம் மாலைகளுடன் தங்க கவசத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் முத்து மாரியம்மன் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.
இதனை தொடர்ந்து திருவீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தகோடிகள் பங்கேற்று கொண்டு முத்து மாரியம்மன் தரிசனம் பெற்றனர்.