Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!!

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!!

ஆடி மாதத்தின் முதல் செவ்வாயை முன்னிட்டு, நேற்று அம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மற்றும் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் போன்ற அம்மன் கோவில்களில் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் உடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பெரும்பாலான பெண்கள் அதில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனை அடுத்து செண்பகராமன்புதூர் அருகில் இருக்கின்ற அவ்வையார் அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வந்து கூழ் மற்றும் கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்துவது நடைமுறை. மேலும் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமில்லாமல் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் நெல்லை, கேரளாவில் இருந்தும் பெரும்பாலானோர் வந்து அவ்வையார் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை மற்றும் கூழ் தயார் செய்து வழிபாடு நடத்துவைத்து வழக்கம்.

இதனை தொடர்ந்து கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால், அம்மன் கோவிலில் கொழுக்கட்டை படைக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே அம்மன் தரிசனம் செய்வதற்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக அவ்வையார் அம்மன் கோவிலில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு தக்கலையில் இருந்து வாகனத்தில் வந்தவர்கள் அம்மனுக்கு படைப்பதற்கு கூழ் மற்றும் கொழுக்கட்டை போன்ற பொருட்களை கொண்டு வந்தனர்.

ஆனால் கொரோனாவால் விதிக்கப்பட்ட தடையை மீறி கோவில் அருகில் உள்ள தோப்புகளில் கூழ் மற்றும் கொழுக்கட்டை தயார் செய்து அவர்களது விருப்பப்படி அம்மனை அங்கிருந்தே வழிபட்டனர். அதனை அடுத்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் அங்கு அவர்கள் பிரகாரத்தை சுற்றி வந்தனர். இதன் காரணமாக கோவில் வளாகம் கடற்கரை பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.

Exit mobile version