180 கோடியில் உருவான லால் சிங் சத்தா… நான்கு நாட்களில் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?

0
164

180 கோடியில் உருவான லால் சிங் சத்தா… நான்கு நாட்களில் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?

அமீர் கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் மிக மோசமான வசூலையே ஈட்டியுள்ளது.

அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆனது. இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்தன,மற்றும் “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ தகவலுமாகும்.

கடந்த 3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த ஆண்டு வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் இந்தியாவில் சகிப்பின்மை அதிகமாகியுள்ளது எனக் கூறியதற்காக இப்போது அவரின் படத்தை புறக்கணிக்கவேண்டும் என சமுகவலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு பதிலளித்துள்ள அமீர்கான் “நான் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் படம் ரிலீஸாகி 4 நாட்களைக் கடந்துள்ள நிலையில் மிக மோசமான வசூலையே பெற்றுள்ளது. சுமார் 180 கோடியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் நான்கு நாட்களில் சுமார் 38 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிக மோசமான வசூலாக பார்க்கப்படுகிறது.