Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் கைது

அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் கைது

அமீர்கான் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன லால் சிங் சத்தா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி வியாழக் கிழமை ரிலீஸ் ஆனது. இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்த “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. படமும் பொறுமையை சோதிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்தியா முழுவதும் வெளியான படம், கிட்டத்தட்ட ஒரு பிராந்திய திரைப்படத்தின் முதல் நாள் வசூலைக் கூட ஈட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் வசூலை மேலும் பாதிக்கும் விதமாக படத்தின் பைரஸி வடிவம் சில இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து படத்தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூருவில் படத்தை வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த கேமரா மற்றும் கணினி போன்ற பொருள்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. இவர்கள் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களோடு தொடர்பில் இருப்பவர்கள் என சொல்லப்படுகிறது.

படத்தின் மோசமான வசூலுக்கு மற்றொரு காரணமாக 2015 ஆம் ஆண்டு அமீர்கான் இந்தியாவில் சகிப்பின்மை அதிகமாகியுள்ளது எனக் கூறியதற்காக இப்போது அவரின் படத்தை புறக்கணிக்கவேண்டும் என சமுகவலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதும் காரணம் என சொல்லப்படுகிறது.

Exit mobile version