‘பிரசர் குக்கர்’ வேட்பாளர்களை அறிவித்த அமமுக தலைமை!
வருகின்றன ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இட்டு தேர்தலை சந்திக்கவுள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அமமுக,டிடிவி தினகரனுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அண்மையில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பா.ஜ.க கட்சி அமமுகவிற்க்கு தேனி மற்றும் திருச்சி தொகுதியை ஒதுக்கயுள்ள நிலையில், தேனி தொகுதியில் அமமுக பொலுசெயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் திருச்சி தொகுதியில் அமமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அமமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக சார்பில் தங்கதமிழ் செல்வனும் திருச்சியில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொது செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவும் போட்டியிடவுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் அமமுக கட்சி பிரசர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடதக்கது.