Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாழ்க்கை வளம் பெற மார்கழி மாதத்தில் இதை செய்யுங்கள்!!!

வாழ்க்கை வளம் பெற மார்கழி மாதத்தில் இதை செய்யுங்கள்!!!

மாதங்களில் உயர்ந்த மாதமாக கருதப்படுவது மார்கழி மாதம் தான்.கிருஷ்ண பகவான் நான் இந்த மாதமாக தான் இருக்கிறேன் என்று கூறிய மாதமும் மார்கழி தான்.தேவர்களுக்கு
விடியற்பொழுதாக அமையக்கூடிய மாதமும் இதுதான்.இவ்வாறு மிகச் சிறப்பு பெற்ற இந்த மார்கழி மாதத்தின் 30 நாட்களில் ஏதேனும் ஒரு நாள் இறைவனை வழிபட்டாலே ஒரு வருடம் வழிபட்டதற்கு சமமாகும்.

இன்று தொடங்கும் இத்தகைய சிறப்பு பெற்ற இந்த மார்கழி நன் நாட்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மார்கழி மாதம் விடியற்காலைப் பொழுது அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு வாசலில் கோலமிட்டு மண் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி,பின்பு பூஜை அறையிலையும் விளக்கேற்றி நம் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்து வந்தோமெனில் நம் வாழ்க்கையில் நினைத்த அத்தனை காரியங்களும் கைகூடும்.அனைவருக்கும் இந்த மார்கழி மாதம் சிறப்பு மாதமாக அமைய எங்கள் சேனலின் சார்பாக வாழ்த்துக்கள்!

Exit mobile version