Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பால் விலையை திரும்ப பெறுக! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உணர்த்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் 3 வருடங்களுக்குப் பிறகு பால் விலை தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பால் உற்பத்தியாளர்கள் கூறிய விலை வழங்கப்படவில்லை. என்று தெரிவித்துள்ளார்.

 

எருமை பாலின் விலையை 51 ரூபாயாகவும், பசும்பாலின் விலையை 44 ரூபாயாகவும் அதாவது லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள். ஆனாலும் அவர்களின் கோரிக்கையை விட 7 ரூபாய் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நீல உறை மற்றும் பச்சை உறை பால்களின் விலை உயர்த்தப்படாததும் வரவேற்கத்தக்கது. தான் ஆனால் ஆரஞ்சு நிற உறையில் சில்லறையில் விற்கப்படும் நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

மாதாந்திர அட்டை மூலமாக வாங்கப்படும் பால் வீட்டு பயன்பாட்டுக்கானது. சில்லறை விற்பனையில் வாங்கப்படும் பால் வணிக பயன்பாட்டுக்கானது என்ற ஆவினின் யூகம் தவறு பெரும்பாலான மக்கள் சில்லறை கடைகளில் தான் பால் வாங்குகிறார்கள் எனவே ஆரஞ்சு பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version