Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரம்! பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற கணவன்!

ஆலம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி என்ற பெயரில் கோவில் வைத்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு தெரிவித்து வருகின்றார். அந்த ஆலயத்திற்கு அருகில் வசித்து வரும் திருமலை மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னால் திருமலை மனைவி தகராறு செய்துவிட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் வீட்டைவிட்டு சென்றதற்காக அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம் என தெரிவித்த திருமலை ராஜேந்திரனை கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கின்றார்.

இதன் காரணமாக, இராஜேந்திரன் ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்து விழுந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து திருமலையை பிடித்து சரமாரியாக அடித்து மதுரவாயல் காவல் துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். ராஜேந்திரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Exit mobile version