Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ABC Juice குடிப்பவரா நீங்கள்.. இதை தெரிஞ்சிக்காம குடிக்காதீங்க..!

ABC juice

#image_title

ABC Juice : இந்த ஏபிசி ஜூஸ் பற்றி சமீப காலங்களாக நாம் கேள்விப்பட்டு வருகிறோம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட பழங்களை மிக்ஸியில் அடித்து, டேஸ்டிற்கு தகுந்தவாறு சில பொருட்களை சேர்த்து ஜூஸ் தயார் செய்து குடிப்போம். ஆனால் இந்த ABC Juice என்றால் என்ன, அதனை குடித்தால் என்ன நன்மைகள் மற்றும் யார் இந்த ஜூஸ் குடிக்க கூடாது, அதனை மருத்துவர்களும் பரிந்துரைப்பதற்கான காரணம் என்ன என்பதை நாம் இந்த பதிவில் காணலாம்.

ஏ பி சி ஜூஸ் (How to make ABC Juice Recipe in Tamil) என்பது A- ஆப்பிள், B-பீட்ரூட், C- கேரட் இது மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு ஒரு மிக்ஸியில் இந்த மூன்றையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து அதனை வடிகட்டாமல் அப்படியே பருக வேண்டும். இதில் டேஸ்டிற்காக தேன் கலந்து கொள்ளலாம். ஆனால் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஏபிசி ஜூஸை தினம்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவது மிகவும் நல்லது. ஆனால் காலையில் குடிக்க இயலாதவர்கள் காலை சாப்பாட்டிற்கும், மதிய சாப்பாட்டிற்கும் இடையில் குடிக்கலாம் அல்லது மாலை நேரங்களில் இதை பருகி வரலாம். முக்கியமாக இந்த ஜூஸ் குடிக்கும் பொழுது வயிறு காலியாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இதனுடைய முழு பயணம் நாம் பெற முடியும்.

இந்த ஜூஸில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் உள்ளன. இதனை குடிப்பதால் முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கிறது. மேலும் இந்த ஜூஸ் குடிப்பதன் மூலம் முடி வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த ஜூஸில் பீட்ரூட் இருப்பதால் ரத்தம் பெருகுவதற்கு இது உதவுகிறது.

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் – ABC Juice

எந்த ஒரு பொருளையும் நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அது தீமையை (ABC Juice Demertits in Tamil) கொடுக்கும். அந்த வகையில் இந்த ஜூஸ் உடலுக்கு நல்ல பலனை கொடுத்தாலும் இதனை தினந்தோறும் குடிக்கலாம் என்று கூறினாலும், ஒரு சில நபர்கள் இந்த ஜூஸ் குடிக்கும் பொழுது கவனமாக இருப்பதை மிகவும் நல்லது. கிட்னியில் கல் உள்ளவர்கள் இந்த ஏ பி சி ஜூஸ் குடிப்பதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் குடிக்க வேண்டாமா என்று கேட்டால் கிடையாது. இவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறை இந்த ஜூஸ் குடிக்கலாம் ஏனென்றால் பீட்ரூட்டில் ஆக்சலின் இருப்பதால் இது கிட்னியில் உள்ள கல் உருவாகுவதற்கு காரணமாக இருக்கிறது. எனவே கிட்னியில் கல் உள்ளவர்கள் இந்த ஜூஸ் குடிப்பதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் இதனை காலை உணவாக மட்டும் எடுத்துக் கொண்டு நேரடியாக மதிய உணவு உண்பவர்களில் லோ- பிரஷர் உள்ளவர்கள் இதனை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் லோ பிரஷர் உள்ளவர்கள் இந்த ஜூஸ் மட்டும் குடித்துக்கொண்டு மதிய உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு மேலும் லோ- பிரஷர் ஏற்பட்டு மயக்கம் வரலாம் எனவே அவர்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை இந்த ஜூஸ் குடித்துக் கொள்ளலாம். அது போன்று நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த ஜூஸ் குடிப்பதை தவிர்த்துக்கொள்ளலாம்.

இந்த ஜூஸ் குடிப்பதால் அதிக அளவு நன்மைகள் (ABC Juice Benifits in Tamil)
உள்ளன. எனவே அனைவரும் இந்த இந்த ஜூஸை தயார் செய்து குடித்துக் கொள்ளலாம். வடிகட்டாமல் அப்படியே குடித்தால் இந்த ஜூஸில் உள்ள முழு பயணையும் நமது உடல் பெற முடியும். அந்த வகையில் மேலே குறிப்பிட்ட சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், நீரிழிவு நோய், மற்றும் லோ பிரஷர் உள்ளவர்கள் இந்த ஜூஸில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

மேலும் படிக்க: வறட்டு இருமலால் தொடர் அவதியா.. இதை 1 முறை மட்டும் குடியுங்கள்!! இனி அந்த பிரச்சனைக்கு இடமே இருக்காது!!

Exit mobile version