Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தையின் நிறம் மற்றும் எடையை அதிகரிக்கும் ABC மால்ட்!! இப்படி செய்தால் விரும்பி குடிப்பாங்க!!

இன்றைய காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தாய்மார்கள் செய்து கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள் செய்து கொடுக்கலாம்.

ஹார்லிக்ஸ்,பூஸ்ட் போன்ற பானங்கள் சுவையாக இருக்கும்.ஆனால் அதில் இருந்து எந்த ஒரு ஊட்டச்சத்தும் குழந்தைக்கு சென்று சேராது.ஆனால் கேரட்,பீட்ரூட்,ஆப்பிள் போன்ற பொருட்களை கொண்டு மால்ட் செய்து கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

ABC மால்ட் நன்மைகள்:-

*ஆப்பிள்,பீட்ரூட்,கேரட்டில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த முறையும் மால்ட் வடிவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

*ABC மால்டில் நார்ச்சத்து,வைட்டமின் ஏ,பி,சி,மாங்கனீசு,ஜிங்க்,காப்பர்,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்புச்சத்து,பீட்டா கரோட்டின்,நியாசின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

*ABC மால்ட்டை தொடர்ந்து பருகி வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

*ABC மால்ட் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.சரும நிறத்தில் ,முன்னேற்றம் காண ABC மால்ட் பவுடரை பாலில் கலந்து பருகலாம்.

*செரிமானப் பிரச்சனையை சரி செய்ய ABC மால்ட் எடுத்துக் கொள்ளலாம்.உடல் உறுப்பு செல்கள் ஆரோக்கியம் மேம்பட இந்த ஆப்பிள்,பீட்ரூட்,கேரட் கொண்டு தயாரிக்கப்பட்ட மால்ட்டை பருகலாம்.

ABC மால்ட் செய்முறை:

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள் – 1/4 Kg
2)கேரட் – 1/4 Kg
3)பீட்ரூட் – 1/4 Kg
4)பாதாம் பருப்பு – 100 Gram
5)பிஸ்தா பருப்பு – 100 Gram
6)ஏலக்காய் – பத்து

செய்முறை விளக்கம்:-

1.கால் கிலோ பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சீவல் கொண்டு சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் கால் கிலோ கேரட்டை தோல் நீக்கிவிட்டு சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு கேரட் மற்றும் பீட்ரூட் துருவலை ஒரு காட்டன் துணியில் போட்டு அழுத்தம் கொடுத்து சாறை பிழிந்து விட வேண்டும்.இந்த சாறை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.நமக்கு தேவையானது கேரட்,பீட்ரூட் துருவல் தான்.இதை காட்டன் துணியில் பரப்பி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு காய வைக்க வேண்டும்.

3.அதேபோல் கால் கிலோ ஆப்பிளை தோல் நீக்கிவிட்டு மெல்லிய துண்டுகளாக நறுக்கி கேரட் பீட்ரூட்டுடன் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

4.அதன் பிறகு சுத்தமான இரும்பு கடாய் எடுத்து காயவைத்த பீட்ரூட்,கேரட் மற்றும் ஆப்பிள் துண்டுகளை போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.வாசனை வரும் அளவிற்கு வறுத்த பிறகு இதனை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

5.பின்னர் பாதாம் மற்றும் பிஸ்தா பருப்பு தலா 100 கிராம் அளவிற்கு எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பிறகு இறுதியாக பத்து ஏலக்காய் சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

6.வறுத்த பொருட்களை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை ஜல்லடையில் கொட்டி சலித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

7.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாசில் ABC மால்ட் பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க வைத்த பாலை வடிகட்டி நன்றாக மிக்ஸ் செய்து பருக வேண்டும்.

Exit mobile version