13 வயது சிறுமியின் ஏழு மாத கருவை கலையுங்கள்! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி தான் வருகின்றனர்.
அவ்வாறு இருப்பினும் இந்த பாலியல் தொல்லை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அச்சிறுமி தற்பொழுது 28 வாரம், அதாவது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
ஏழு மாதத்திற்கும் குறைவாக இருந்திருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி கருக்கலைப்பு நடந்திருக்கும். ஆனால் சட்டப்பிரிவு 3(2) யின் படி 20 வாரம் அதாவது ஐந்து மாதத்திற்கும் மேலானால் நீதிமன்றத்தின் உத்தரவோடுத்தான் கருக்கலைப்பு செய்ய வேண்டும். அந்த வகையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மகளின் கருவை கலைக்க அனுமதி கோரி வழக்கு தொடுத்திருந்தார்.இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.
13 வயது மிக்க சிறுமி குழந்தை பெற்றெடுத்தால் அவரது உடல் நலமும், மனநிலையும் பாதிக்கப்படும். அது மட்டும் இன்றி அவரது குடும்பமும் பெருமளவில் சிரமத்தை சந்திக்கும் என்று அச்சிறுமியின் தந்தை அவரது கருத்தை முன் வைத்ததையடுத்து அச்சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி கூறியது, சிறுமியின் கரு கலைப்புக்கு சிறப்பு வாய்ந்த அரசு மருத்துவர்களை நியமனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி திருவண்ணாமலை குழந்தைகள் நல அமைப்பு பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அச்சிறுமியின் குடும்பத்திற்கும் தேவையான வசதி அனைத்தும் செய்து தருமாறு கூறி உத்தரவிட்டுள்ளார்.