Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

About burning government bus! One died on the spot!

About burning government bus! One died on the spot!

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. திடீரென்று அந்த இருசக்கர வாகனம் அங்கு சென்ற அரசு பேருந்து மீது மோதியது. அவ்வாறு மோதியதில் அரசு பேருந்து தீப்பற்றி எறிய ஆரம்பித்துள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது வேகமாக வந்த, இந்த இரு சக்கர வாகனம் மோதியுள்ளது. அவ்வாறு மோதியதும் தீயானது மளமளவென பற்றி எரிய தொடங்கிய உள்ளது.

பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். டீசல் டேங்க் மீது இருசக்கர வாகனம் மோதியதால்  இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. வாகனத்தில் மூவர் பயணம் செய்த நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனையடுத்து இந்த விபத்து குறித்து  போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version