உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்போது இங்கிலாந்து 4வது இடத்தில் நீடித்து வருகிறது இங்கிலாந்தில் இந்த நோய் தொற்று பரவல் காரணமாக, ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில நாட்களாக அங்கே நோய்த் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இங்கிலாந்தில் சென்ற ஒரு வார காலமாக 50 ஆயிரம் முதல் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், நேற்றும் இங்கிலாந்தில் 90 ஆயிரத்து 679 பேர் நோய் தொற்றால் பாதிப்படைந்து இறக்கிறார்கள். இதன்மூலமாக அங்கே நோய்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது.
இதுவரையில் நோய்த்தொற்று பாதிப்பால் 172 பேர் பலியாகி இருக்கிறார்கள்.இதன் காரணமாக, இங்கிலாந்து நாட்டில் இதுவரையில் இந்த நோய் தொற்றால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 433 ஆக அதிகரித்திருக்கிறது.
அதோடு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 99 லட்சத்தை நெருங்கி இருக்கிறது. தற்சமயம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.