AC Buying Guide in Tamil: அடிக்குற வெயிலுக்கு ஏசி இல்லை என்றால் இருக்க முடியாது போல.. அவ்வாறு சொல்லும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அனைவராலும் ஏசி வாங்க முடியாத நிலை இருந்தாலும், எல்லோரையும் இவ்வாறாக யோசிக்க வைத்துள்ளது இந்த வெயில். அதிலும் அக்னி வெயில் தொடங்கியதில் இருந்து எங்கு பார்த்தாலும் வறண்ட வானிலை தான் நிலவுகிறது. ஒரு சிலருக்கு ஏசி வாங்க யோசனை இருக்கும் அப்படி ஏசி வாங்க செல்வதற்கு முன்பு நாம் ஒரு சில விஷயங்களை தெரிந்துக்கொண்டு போய் வாங்கினால் இன்னும் தெளிவாக நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம். ஏசி வாங்கிய பிறகு கவலை கொள்ளாமலும் இருக்கலாம். இந்த பதிவில் ஏசி வாங்க செல்லும் முன் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களை (Buying New AC Tips in Tamil) பார்க்கலாம்.
அறையின் அளவு
முதலில் நம் வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம். நீங்கள் ஏசியை எந்த இடத்தில் பொருத்த போகிறீர்கள் என்பது பொருத்து தான் ஏசியின் தன்மையை நாம் முடிவு செய்ய முடியும். நீங்கள் உங்களின் அறையில் அதாவது உங்களின் அறை 100-120 சதுர அடி இருந்தால் 1 டன் ஏசி பொருத்தமாக இருக்கும். அதுவே குறைந்த சதுர அடியிலான ரூம் என்றால் இந்த 1 டன் ஏசி மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் நீங்கள் ஹால் போன்ற இடங்களில் ஏசி பொருத்த போகிறீர்கள் என்றால் 1 டன் ஏசி பத்தாது அதற்கு நீங்கள் 1.5 டன் அல்லது 2 டன் ஏசியை தான் (Buying New AC ideas in Tamil) வாங்க வேண்டும்.
ஸ்டார் ரேட்டிங் – Ac Star Rating Means in Tamil
ஏசி வாங்க செல்பவர்கள் நீங்கள் வாங்கும் ஏசியின் ஸ்டார் ரேட்டிங்கை தெரிந்துக்கொள்ளுங்கள். குறைவான ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசி அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். எனவே நீங்கள் வாங்கும் ஏசியின் ஸ்டார் ரேட்டிங் ஐந்தாக இருந்தால் சிறப்பு. விலை அதிகமாக இருந்தாலும் இதன் செயல் திறன் நீண்ட நாட்களுக்கு வரும். பராமரிப்பு செலவும் சேமிக்கப்படும்.
இன்வெர்ட்டர் ஏசி (Normal AC vs Inverter AC)
நீங்கள் வாங்கும் ஏசி இன்வெர்ட்டராக இருந்தால் இன்னும் சிறப்பு. இன்வெட்டர் ஒரு ஏசியில் இருக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும். இந்த இன்வெர்ட்டர் டெக்னாலஜி கொண்ட ஏசியானது அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளாமல், ஒரு அறையின் குறிப்பிட்ட வெப்பநிலையை பராமரிக்க இந்த இன்வெர்ட்டர் ஏசி முக்கியமானதாக உள்ளது.
காப்பர் கம்ப்ரஸர் ஏசி (Air Conditioner Copper Compressor)
புதிய ஏசி வாங்கும் போது காப்பர் கம்ப்ரஸ் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். பொதுவாக இந்த காப்பர் கம்ப்ரஸர் ஏசி சந்தையில் கிடைக்கும் மற்ற ஏசிகளை விடவும் கூடுதல் விலையாக இருக்கும். ஆனால் இதன் செயல்பாடு திறன் மற்ற ஏசிகளை ஒப்பிடும் போது திருப்திகரமானதாக இருக்கும். மேலும் ஏசியின் பாராமரிப்பு செலவை இது சேமிக்கிறது.
ஒலி அளவு
பொதுவாக ஏசி யூனிட் உருவாக்கும் சத்தம் உங்களுக்கு இடையூறை உருவாக்கலாம். எனவே குறைந்த டெசிபல் சத்தம் உருவாக்கும் ஏசியை வாங்குவது நல்லது. இது நிம்மதியான, ஒரு அமைதியான நல்ல அனுபவத்தை கொடுக்க கூடியதாக அமையும்.
ஆர்-32 கேஸ்
நீங்கள் வாங்கும் புதிய ஏசி ஆர்-32 கேஸை பயன்படுத்துகிறதா என பார்த்து வாங்குங்கள். இந்த ஆர்-32 கேஸ் (r32 gas for ac) சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ஆகும்.
ஏசி வகைகள்
தற்போது சந்தையில் பல்வேறு ஏசி வகைகள் (AC Models) கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவமான நன்மைகளை கொண்டிருக்கும். ஸ்பிலிட் ஏசி, போர்ட்டபிள் ஏசி, விண்டோ ஏசி, மற்றும் சென்ட்ரலைஸ்ட் ஏசி ஆகியவை கிடைக்கிறது. நீங்கள் விண்டோ ஏசியை பரிந்துரைத்தால் அதற்கு உங்கள் வீட்டில் இந்த ஏசியின் பரிணாமங்களுடன் பொருந்தும் வகையில் விண்டோ இருக்க வேண்டும். மேலும் அதிக அளவிலான மக்கள் ஸ்பிலிட் ஏசியை பரிந்துரைக்கிறார்கள்.
வாரண்டி (ac warranty)
பொதுவாக புதிதாக வாங்கும் ஏசிகளுக்கு 1 வருடம் வரை வாரண்டி கொடுக்கப்படும். வாங்கும் ஏசியில் உள்ள கம்ப்ரஸர்க்கு 10 ஆண்டுகள் வரை உத்தரவாதம் கொடுக்கப்படும் எனவே நீங்கள் வாங்கும் ஏசியின் கம்ப்ரஸர்க்கு எத்தனை ஆண்டுகள் வாரண்டி என்று கேட்டுக்கொள்ளுங்கள். மேலும் ஏசி வாங்கிய பிறகு அதற்கு பராமரிப்பு முக்கியம். உங்கள் பகுதியில் நீங்கள் வாங்கும் ஏசியின் பிராண்டிற்கு உடனடியாக சர்வீஸ் கிடைக்குமா என்றும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
மேலும் படிக்க: Best Ac 2024: சியோமியின் அசத்தல் தயாரிப்பு..! AC + Heater மாடல்..!