கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவினாலும் தற்போது ஓரளவு அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் தொற்று வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கி வருகிறது.
வேகமெடுக்கும் கொரோனா
