Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் ஆரம்பித்துவிட்டது:? திருச்சியில் நடந்த விபரீதம்?

கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு அமலில் இருந்தபொழுது பொது போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டது.இதனால் வாகன விபத்துக்கள் முற்றிலும் குறைந்தது.தற்போது மீண்டும் ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது சாலையில் வாகனங்கள் செல்ல தொடங்கி விட்டது.இதனால் தற்போது விபத்து எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகின்றது.

திருச்சி மாவட்டம் பாலவாக்கம் அருகே லாரியும் காரும் ஒன்றுக்கொன்று எதிர் எதிரே வந்துகொண்டிருந்தது.திடீரென லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் கண்ணிமைக்கும் நொடியில் லாரியும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் காரில் இருந்த இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.மேலும் காரில் இருந்த மற்ற இரண்டு நபர்களை மீட்டெடுத்து பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version