150 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி ஏற்பட்ட விபத்து!!! அமெரிக்கா நாட்டில் ஏற்பட்ட பரபரப்பு!!!
அமெரிக்கா நாட்டில் 150 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நேரத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
அமெரிக்கா நாட்டில் லூசியானா மாகாணம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக சூப்பர் மூடுபனி என்று அழைக்கப்படும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகின்றது. சூப்பர் மூடுபனி என்பது அடர்த்தியான மூடுபனி ஆகும். தற்பொழுது சூப்பர். மூடுபனி அமெரிக்காவில் லூசியானா பகுதியில் பொழிந்து வருகின்றது.
இந்நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்கா நாட்டில் லூசியானாவில் செயின்ட் ஜான் தி பாப்டிஸ்ட் பாரிஷில் இண்டர்ஸ்டேட் 55ல் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது.
இந்த பெரும் விபத்தில் தற்பொழுது வரை 7 பேர் பலியானார்கள் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இந்த விபத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி சிக்கியுள்ளது.
இதையடுத்து ஒன்றன் பின் ஒன்றாக சிக்கிய கார்கள், வாகனங்களை மீட்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.