சாஸ்திரப்படி இந்த 5 பொருளை மட்டும் தப்பித்தவறிக்கூட கொடுக்கவோ, வாங்கக் கூடாதாம்!

0
77

சாஸ்திரப்படி இந்த 5 பொருளை மட்டும் தப்பித்தவறிக்கூட கொடுக்கவோ, வாங்கக் கூடாதாம்!

சாஸ்து வாஸ்திரப்படி சில பொருட்களை நாம் மற்றவர்களிடம் வாங்கினால் நமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடுமாம்.

பணம் மட்டும் இல்லை இந்த 5 பொருட்களை யாரிடமும் வாங்கவோ, கொடுக்கவோ கூடாதாம். அவை என்னவென்று பார்ப்போம் –

உப்பு –

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் உப்பு தீர்ந்து போனால், அக்கம் பக்கத்திற்கு சென்று உப்பை வாங்கவே கூடாது. அதேபோல், பணம் கொடுக்காமல் உப்பை வாங்கக்கூடாது. ஜோதிடத்தில் உப்பு சனி பகவானின் தொடர்பை தெரிவிக்கிறது. அப்படி இருக்கும்போது உப்பை யாருக்கும் கொடுக்கக்கூடாது. அப்படி செய்தால் சனிபகவான் கோபப்படுவார் என்று சொல்லப்படுகிறது. அப்படி உப்பை யாருக்காவது கொடுத்தால் நமக்கு நிறைய கடன் பிரச்சினை ஏற்படுமாம்.

தயிர் –

நம் வீட்டில் தயிர் இல்லையென்றால், பக்கத்து வீட்டிற்கு சென்று கொஞ்சம் தயிர் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின்படி, தயிரை யாரிடமும் காசு கொடுக்காமல் வாங்கக்கூடாதாம். அப்படி தயிர் வாங்கினால், கொடுத்தாலோ நமக்கு பதற்றம் மற்றும் அமைதியின்மை ஏற்படுமாம். ஆனால், இவற்றை தவிர்ப்பது நல்லது.

கைக்குட்டை –

பணம் கொடுக்காமல் நாம் கைக்குட்டையை யாருக்கும் கொடுக்கக்கூடாதாம். இப்படி செய்தால் நமக்கு சண்டை மற்றும் பிரச்சினைகள் அதிகமாக வருமாம். அதனால், யாருக்கும் கைக்குட்டையை பரிசாகக்கூட கொடுக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இப்படி யாராவது கைக்குட்டையை கொடுத்தால் அவர்களுக்குள்ளான இடைவெளி அதிகரித்து விடுமாம்.

கருப்பு மொச்சை –

வாஸ்து சாஸ்திரப்படி கருப்பு மச்சமொச்சையை யாரிடமும் பணம் கொடுக்காமல் வாங்கக்கூடாதாம். அப்படி தப்பித்தவறி நாம் கொடுத்தாலோ, வாங்கினாலோ நமக்கு தேவையற்ற செலவுகளை ஏற்படுத்திவிடுமாம். எதிர்பாராத விதமாக பணம் வீணாகி போகுமாம். அதிலும், சனிக்கிழமை யாரிடமும் கருப்பு மொச்சையை வாங்கவே கூடாது. சில நேரங்களில் நமக்கு அது பிரச்சினையாகி விடும்.

தீப்பெட்டி _

பணம் இல்லாமல் தீப்பெட்டியை யாருக்கும் கொடுக்கக்கூடாது. தீக்குச்சிகள் நெருப்புடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதால், உறவினர்களிடையே சண்டை, பிரச்சினை ஏற்படுமாம். இதனால் குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. எனவே தீப்பெட்டியை யாருக்கும் கொடுக்கக்கூடாதாம்.